போராட்டத்தில் சேதமடைந்த பொருட்களுக்காக 6 லட்சம் ரூபாய் வசூல் செய்து கொடுத்த இஸ்லாமியர்கள்!
- மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
- இதில் உத்தரபிரதேசத்தில் சேதமடைந்த பொது சொத்துகளுக்கு இழப்பீடாக 6 லட்சம் ரூபாயை இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் போராட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. அதனால், பொதுச்சொத்துக்கள் சேதம் அடைந்தன. இதனை அடுத்த மத்திய பிரதேச அரசானது, கலவரத்தில் சேதமடைந்த பொருள்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள்தான் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியது.
அதனை தொடர்ந்து, கலவரத்தின்போது புலாந்த்சாகரில் கடந்த வாரம் பொதுமக்களின் வாகனம், பொதுச்சொத்துக்கள் சேதம் அடைந்துவிட்டன. அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய சமூகத்தினர் ஒன்று சேர்ந்து வசூலித்து சுமார் 6,27,507 ரூபாய் வரை வசூல் செய்து புலாந்த்சேகர் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.