‘உ.பி-யில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாராகி வருகிறது!’ – பிரியங்கா காந்தி அதிரடி கருத்து!
- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 135 ஆவது வருடம் கடந்த விழாவானது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கொண்டாடப்பட்டது.
- இந்த விழாவில் பேசிய காங்கிரஸ் முக்கிய தலைவர் பிரியங்கா காந்தி பல கருத்துக்களை கூறினார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து 135 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை நாடுமுழுவதும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்காக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் பிரியங்கா கலந்து கொண்டார். அந்த விழாவில் பிரியங்கா காந்தி பல அதிரடி கருத்துகளை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ‘குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக யார் பொய் கூறுகிறார்கள் என நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவும், மேலும் ,’இந்த விவகாரத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும். அவர்கள் தைரியமாக குரல் கொடுக்க வேண்டும். எனவும் கூறினார். காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் ஒரு போதும் தயக்கம் காட்டக்கூடாது. என கூறிய அவர், உத்தரபிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் தனித்து எதிர்கொள்ள தயாராகி வருகிறது. எனவும் தெரிவித்தார்.