கடந்த 10 ஆண்டுகளில் உலகின் பிரபலமான இளம்பெண்.! ஐ.நா. அறிவிப்பு.!
- ஐநா சபை உலகில் பிரபலம் வாய்ந்த பாகிஸ்தான் இளம்பெண்ணை தேர்வு செய்துள்ளது.
- மலாலா யூசுப்சாயின் கடுமையான உழைப்பு, சமூகத்தின் மீதான பற்று போன்ற கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக அவரை உருவாக்கி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஐநா சபை உலகில் பிரபல வாய்ந்த நிகழ்வுகள், பிரபலம் வாய்ந்த நபர்களை தேர்தெடுத்து அறிவுப்பு வெளியிடும். கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐ.நா கவுரவித்துள்ளது. இவர் பெண்களின் கல்விக்காக போராடிய மலாலாவை கடந்த 2012-ம் ஆண்டு தலீபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். எனினும் இந்த தாக்குதலில் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
அதன்பிறகு அவர் பாகிஸ்தான் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார். பின்னர் 2014-ம் ஆண்டு அந்த பெண்ணுக்கும், இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும் ஒன்றாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2017-ம் ஆண்டு ஐ.நா.வின் அமைதிக்கான தூதரானார்.
இந்நிலையில், மலாலா யூசுப்சாயின் கடுமையான உழைப்பு, சமூகத்தின் மீதான பற்று போன்ற கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக அவரை உருவாக்கி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளாக, 2010-ம் ஆண்டு ஹைதி நிலநடுக்கம், 2011-ம் ஆண்டு சிரிய உள்நாட்டு போர் துவக்கம், 2012-ம் ஆண்டு பெண்களின் கல்விக்கு ஆதரவாக மலாலாவின் பணிகள், 2014-ம் ஆண்டு எபோலா வைரஸ் தாக்குதல், 2015-ம் ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் ஏற்பு ஆகியவற்றை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.