நித்தியானந்தா வழக்கில் திருப்பம் – நீதிமன்றம் உத்தரவு
- நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டு தருமாறு குஜராத் உயர்நீதி மன்றத்தில் ஜனார்த்தன சர்மா என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்
- ஜனார்த்தன சர்மாவின் மகள்களுக்கு அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டு தருமாறு குஜராத் உயர்நீதி மன்றத்தில் ஜனார்த்தன சர்மா என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மேலும் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு புகாரும் அளிக்கப்பட்டது.
அவரது மனுவில் ,நித்தியானந்தா தனது 2 மகள்களை சட்டவிரோதமாக ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் எனவும் கோரி ஆட்கொணர்வு மனுவை அகமதாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் ஜனார்த்தன சர்மா. இந்த மனுவை விசாரித்த, அகமதாபாத் உயர்நீதிமன்றம்,ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் தங்கி இருக்கும் நாட்டின் இந்திய தூதரகத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அகமதாபாத் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையானது ஜனவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.