நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய மருத்துவக் கல்லூரிகள் !
மத்திய அமைச்சரவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 24 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க சுமார் 14 ஆயிரத்து 930 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டமாக மருத்துவ வசதியில்லாத பகுதிகளில் 24 மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மருத்துவக் கல்லூரிகளில் தற்போது உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு கூடுதலாக 10 ஆயிரம் இளநிலைப் படிப்புக்கான இடங்களும், முதுநிலை படிப்பில் 8 ஆயிரத்து 58 இடங்களை அதிகரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் 2020-21ம் ஆண்டுகளில் நிறைவேற்றவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 248 செவிலியர் பயிற்சி மையங்களும், கிராமப்புறங்களில் பிரசவ தாதி பயிற்சி மையங்களும் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.