சுறாவால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட நபர்!அடுத்து நடந்த அதிசயம்!

Default Image
  • கடலுக்குள் விழுந்து சுறாவிடம் மாட்டிக்கொண்ட நபர்.உயிர்தப்பிய சம்பவம்.
  • அமெரிக்கா கடலோர படை வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் பரவிவருகிறது.

கலிபோர்னியாவில் உள்ள கடற்கரையோரத்தில் கடந்த சனிக்கிழமை பெரிய வெள்ளை சுறாவால் கடிபட்ட ஆதம் கூன்ஸ் என்ற நபரை அமெரிக்க கடலோர காவல்படை காப்பாற்றியுள்ளது.

இந்நிலையில் மீட்கப்பட்ட நபரான ஆதம் கூன்ஸ் இந்நிகழ்வினை கிறிஸ்மஸ் மிராக்கிள் என்றே குறிப்பிடுகிறார்.அமெரிக்க கடலோர காவல்படை மதியம் 3.15 மணியளவில் கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்த நபரை சுறாமீன் கடித்ததாக கூறியுள்ளனர்.

பின்னர் இது குறித்து தெரிவித்த ஆதம் கூன்ஸ் நான் கடிபட்டதை கூட உணரவில்லை. மாறாக உடனடியாக கடலில் நீருக்கடியில் வீசப்பட்டேன் என்றுள்ளார்.மேலும் இந்த தாக்குதலைக் கண்ட ஆதமின் நண்பர் 5அடி ஆழம் வரை கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறுகிறார்.

இந்நிலையில் கடலோர காவல்படை விமானத்தின் மூலம் ஆதம்மை காப்பாற்றி விமான நிலைய துணை மருத்துவர்கள் மூலமாக முதலுதவி செய்துள்ளனர்.பின்னர் அவர்கள் அருகில் இருந்த உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அமெரிக்க கடலோர காவல் படை ஆதம்மை மீட்கும் வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த சம்பவம் உண்மையிலேயே திகிலூட்டும் அனுபவமாக இருந்தது.இந்நிலையில் நான் உயிருடன் இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஆதம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்