கார்கில் பகுதியில் 145 நாட்களுக்கு பிறகு இணையதள சேவை.!
இந்த அறிவிப்புக்கு இரு அவையிலும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மசோதாவிற்கு இரு அவையிலும் வாக்கெடுப்பு நடைபெற்று மாநிலங்களவையிலும் ,மக்களவையிலும் இரண்டிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வதந்திகள் பரவி வன்முறைகள் வரலாம் என எண்ணி அங்கு பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இதனால் முக்கியமாக இணையதள சேவை முடக்கப்பட்டது. மேலும் மெகபூபா முப்தி , உமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதால் அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.அங்கே பணியில் இருந்த 7000 துணை ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர். இருப்பினும் பதற்றமான பகுதிகளில் மட்டும் இணையதள சேவை வழங்காமல் இருந்த நிலையில் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் பகுதியில் 145 நாட்களுக்கு பிறகு மீண்டும் இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது.
இந்த இணையதள சேவையை பொதுமக்கள் யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.