37 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருந்து வந்த நபர்!17 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த தாய்!பின்னர் நடந்த விபரீதம்!

Default Image
  • தனது வயதான மகனுக்கு 17 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த தாய்.சிறுமி அளித்த புகார்.
  • மகன் உட்பட நாலுபேர் கைது.தலைமறைவான தாயிற்கு வலைவீச்சு.

கரூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ஜெயலட்சுமணன் ஆவார்.இவருக்கு இவரின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க எண்ணியுள்ளனர்.ஆனால் அவருக்கோ வயது தொடர்ந்து ஏறிக்கொண்டே இருந்துள்ளது.

மேலும் அவருக்கு வயது அதிகம் ஆகிவிட்டதால் பலரும் பெண் தர மறுத்துள்ளனர். இந்நிலையில் எப்படியாவது திருமணம் செய்து வைக்க விரும்பிய ஜெயலட்சுமணனின் தாயார் நல்லம்மாள் 17 வயது சிறுமியின் பெற்றோரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

பின்னர் அந்த சிறுமியின் பெற்றோரின் மனதை மாற்றிய நல்லம்மாள் தனது 37 வயது மகனுக்கும் அந்த சிறுமிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.இந்நிலையில் திருமணமாகி ஆறு மாதங்களாக ஜெயலட்சுமணன் சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துவிட்டதாக ஊர்மக்களில் சிலர் குழந்தை நல அமைப்பில் புகார் அளித்துள்ளனர்.மேலும் அந்த சிறுமியும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜெயலட்சுமணன் உட்பட நாலு பேரை கைது செய்துள்ளனர்.மேலும் தலைமறைவான ஜெயலட்சுமணனின் தாயார் நல்லம்மாவை தேடிவருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்