தலித்தா…தேர்தலையே புறக்கணித்த கிராம மக்கள்… அந்த மக்களின் வினோத முடிவு…
- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் பிச்சிவிளை.
- இந்த கிராம ஊராட்சியில் இன்று நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான கிராம மக்கள் வாக்களிப்பதை தவிர்த்துள்ளனர்.
இந்த கிராமத்தில் மொத்தம் ஆறு வார்டுகள் உள்ளன.இந்த கிராமத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 785. இந்த ஊராட்சியில் இந்த முறை தலைவர் பதவி சுழற்சி முறையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த முறை கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஊராட்சியில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 6 ஓட்டுகள் மட்டுமே இருக்கின்றது. எனவே ஊராட்சியில் சிறுபான்மையினராக உள்ள தலி சமூகத்தை சேர்ந்தவர் தலைவரா? என்று பிற மக்களிடையே கருத்து எழுந்தது. இதை கருத்தில் கொண்டு ஊராட்சியில் உள்ள ஆறு வார்டுகளுக்கும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.மேலும் அவர்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி உள்ளனர்.
இன்று பிச்சிவிளை ஊராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்த ஊராட்சியில் ஆறு வாக்காளர்கள் மட்டுமே ஓட்டு போட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரி மற்றும் சுந்தராச்சி என்ற இரு தலித் பெண்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களையும் சேர்த்து மொத்தமே 6 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பிற சமூக பொதுமக்கள் வந்து வாக்களிக்க வேண்டும் என்று அதிகாரிகள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் எடுத்து கூறியும் , மக்கள் அதை ஏற்கவில்லை. இந்த தேர்தலை இந்த கிராம மக்கள் புறக்கணித்தது தமிழக மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.