பாம்பிற்கு முத்தமிட முயன்ற நபர்!பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

- பாம்பை பிடிக்க வீட்டிற்கு சென்ற நபர்,பாம்பிற்கு முத்தம் கொடுக்க முயன்ற போது பாம்பு அவரை கடித்தது.
- தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பத்ராவதி பகுதியில் வீட்டிற்குள் நல்ல பாம்பு நுழைந்ததை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பாம்பு பிடி வீரர் சோனு என்பவரை வரவழைத்துள்ளனர்.பின்னர் அங்கு வந்த சோனு கையால் பாம்பை பிடித்துள்ளார்.
ஆனால் அவர் அந்த பாம்பை வெளியே கொண்டு விடாமல் சிறுது நேரம் கையில் வைத்து கொண்டு விளையாடியுள்ளார்.ஒரு கட்டத்தில் மிகவும் தீவிரமடைந்த நபர் பாம்பின் உதட்டோடு தன் உதட்டை வைத்து முத்தம் கொடுக்க முயன்றுள்ளார்.
அப்போது ஆத்திரம் அடைந்த பாம்பு சோனுவின் உதட்டை கடித்து தொங்கியுள்ளது.இதில் விஷம் தலைக்கேறியதால் சோனு அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.அப்போது பாம்பு எதிர்பாராத விதமாக மாயமாகியுள்ளது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் சோனுவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளன.பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் சோனு உயிர்தப்பியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சோனுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!
April 16, 2025
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025