10.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது! – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!
- தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.
- இந்த உள்ளாட்சி தேர்தல் காலை 9 மணி வரை 10.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 1.30 கோடி வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
நான்கு பதவிகளுக்கும் நான்கு விதமான நிறம் கொண்ட வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படுகிறது. தற்போது விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்ட வாக்கு பதிவில் காலை 9 மணி வரை தமிழகத்தில் 10.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதனை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் சில வாக்குச்சாவடிகளில் இருந்து புகார் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். குறிப்பிட்ட வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிட்டுள்ளார்.