உள்ளாட்சி தேர்தல்:அமைச்சர் செங்கோட்டையன் வரிசையில் நின்று வாக்களித்தார்.!
- தமிழகத்தில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
- குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
தமிழகத்தில் புதியதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருந்த நிலையில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 30-ம் தேதி நடைபெற உள்ளது. முதலில் 156 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் வரிசையில் நின்று வாக்களித்தார்.