போராட்டங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்ட 124 பேர் கைது!
- மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
- இந்த போராட்டத்தின்போது உத்தரபிரதேச மாநிலத்தில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்ட 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியஅரசு கொண்டுவந்திருந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் போராட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததாகவும், 61 பேருக்கு குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உத்தரபிரதேச காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும் இந்த போராட்டங்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்ட 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், 9,372 டிவிட்டர் கணக்குகளும், 9,856 ஃபேஸ்புக் கணக்குகளும், 181 யு டியூப் பக்கங்களும்முடக்கப்பட உள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின் போது 258 போலீஸ்காரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.