தென்கொரியாவிற்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி பயணம்!

Default Image

குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான தூதுக்குழுவில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி,  இடம்பெற்று தென்கொரியாவுக்கு வருவதை அந்நாடு வரவேற்றுள்ளது. இரு நாடுகள் இடையே 1950ஆம் ஆண்டில் தொடங்கி 1953ஆம் ஆண்டுவரை நடைபெற்ற கொரிய போருக்குப் பின்னர், வடகொரிய அதிபர் குடும்பத்தை சேர்ந்த யாரும் தென்கொரியா சென்றதில்லை.

இந்நிலையில், முதல் முறையாக வடகொரிய அதிபர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தென்கொரியாவுக்கு செல்ல உள்ளார். அதிபர் கிம் ஜோங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜோங் (Kim Yo Jong), குளிர்கால ஒலிம்பக் போட்டிக்கான குழுவில் இடம்பெற்று தென்கொரியா செல்வார் என வடகொரியா அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை இரு நாடுகளிடையேயான நல்லுறவு மேம்படுவதற்கு வழிவகுக்கும் என கருதப்பட்டாலும், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நிகரானவராக தம்மை கொட்டிக் கொள்ள கிம் ஜோங் உன் எடுக்கும் முயற்சி என்றும் கூறப்படுகிறது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் டிரம்பின் மகள் இவாங்கா கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்