ரயில்வே வருமானம் கடும் வீழ்ச்சி! பயணிகள் கட்டணம் உயருகிறதா?!

Default Image
  • ரயில்வே வருமானமானது நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இதனால் ரயில்வே டிக்கெட் மற்றும் சரக்கு கட்டணம் மறு சீரமைக்கப்படும் என ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.

ரயில்வே நிர்வாகம் தற்போதைய நடப்பு காலாண்டில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பயணிகள் ரயில் மூலமாக 13,398.92 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. அதேபோல இரண்டாம் காலாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பயணிகள் மூலம் 13,243.82 கோடிகள் வருமானம் ஈட்டி உள்ளன.

பயணிகள் கட்டணம் 155 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சரக்கு ரயில் கட்டணம் 3900 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருமான விவரங்கள் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது ரயில்வே வருவாய் குறைந்து காணப்படுவதால் பயணிகள் டிக்கெட் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் மீண்டும் மறுசீரமைக்க உள்ளோம். இதுகுறித்து தற்போது விரிவாக கூற இயலாது. சரக்கு ரயில் கட்டணம் ஏற்கனவே அதிகமாக உள்ளது. அதனால் ஆலோசனைக்கு பின்னரே இறுதி முடிவு எட்டப்படும். என தெரிவித்தார்.

மேலும், ‘ரயில்வே ஊழியர்கள் இதுவரை ரயில்வே நிர்வாகமே தேர்வு செய்து வந்தது. ஆனால், இது இனிமேல் யு.பி.எஸ்.சி தேர்வு மூலம் ரயில்வே ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.’ எனவும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்