தினம் ஒரு திருவெம்பாவை

Default Image
  • மார்கழியில் பாட வேண்டிய பதிகம் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை
  • இன்றைய பாடலின் தொடர்ச்சியும் அதன் பொருளையும் பற்றி அறிந்து கொள்வோம்

 

திருவெம்பாவை

பாடல்: 11

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரன்னக்

கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி

ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோங்காண்! ஆரழல்போற்

செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளா!

ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்

எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பவாய்!

– மாணிக்கவாசகர் –

பாடல் விளக்கம்:

களைந்த நெருப்பை போன்ற செம்மை நிறமுடைய சிவபெருமானே! வெண்மையுடைய திருநீற்றை அணிந்தவனே! எல்லாச் செல்வங்களையும் உடையவனே! சிறிய இடையினையும் மை தீட்டிய அகன்ற கண்களையும் உடைய உமாதேவியின் மணாளானே! ஏயனே! வழிவழீயடிமைகளாகிய நாங்கள் வண்டுகள் மொய்க்கின்ற அகன்ற பொய்கையிலே முகேர் என்று மூழ்கிக் கைகளால் நீரைக் குடைந்து குடைந்து கழலணிந்த உன் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வாழ்ந்தோம் எங்கள் தலைவனே! நீ ஆட்கொண்டு அருளும் திருவிளையாடலின் வழிபட்ட அடியார்கள் செல்லும் நெறியெல்லாம் நாங்களும் சென்று முடித்தோம்.நாங்கள் இளைத்து விடாமல் காப்பாயாக என்று அருளுகிறார் மாணிக்கவாசகர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்