சட்டம் செல்லுமா செல்லாதா என்பதை ஆராயமலே சட்டத்தை கொண்டு வந்துள்ளனர் – சிதம்பரம்
- சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
- இதில் சிதம்பரம் பேசுகையில் ,சட்டம் செல்லுமா செல்லாதா என்பதை ஆராயமலே சட்டத்தை கொண்டு வந்துள்ளனர் என்று பேசினார்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த கருத்தரங்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத்,திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில்,15 நாளில் இந்த புரட்சியை காணமுடிகிறது என்றால் கண்டிப்பாக மக்களை நம்பி எவ்வளவு பெரிய புரட்சியிலும் இறங்கலாம்.
ஆட்சிக்கு வந்தவுடன் முத்தலாக் சட்டம்,அசாம் என்.ஆர்.சி மற்றும் ஜம்மு காஷ்மீர் அந்தஸ்து ரத்து,குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை கொண்டு வந்து இந்தியாவை இந்து ராஷ்ரமாக மாற்ற பாஜக முயற்சி செய்து வருகிறது. சட்டம் செல்லுமா செல்லாதா என்பதை ஆராயமலே சட்டத்தை கொண்டு வந்துள்ளனர் .இந்துக்களை அனுமதிப்பார்கள் ஆனால் தமிழ் இந்துக்களை அனுமதிக்க மாட்டோம் என கூறுகிறது என்று தெரிவித்துள்ளார்.