பாக்கி ரூ.268 கோடி..!இனி மேல் அரசு அமைப்புக்கு விமான டிக்கெட் கிடையாது- கொதித்த ஏர் இந்தியா
- அரசு அமைப்புகளுக்கு கடனில் விமான டிக்கெட் வழங்குவது நிறுத்தம்
- அரசு அமைப்புகள் சுமார் ரூ.268 கோடிக்கு டிக்கெட் கட்டண தொகையை செலுத்தவில்லை என்று ஏர் இந்தியா குமுறல்
அரசு அமைப்புகளுக்கு கடனில் விமான டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.இது குறித்து ஏர் இந்தியா தெரிவிக்கையில் பல்வேறு அரசு அமைப்புகள் சுமார் ரூ.268 கோடிக்கு டிக்கெட் கட்டணத் தொகையை நிலுவையில் வைத்து உள்ளன. ஏற்கனவே அரசு அமைப்புகளுக்கு கடனில் நாங்கள் வழங்கிய டிக்கெட்டுகளுக்கு தொகை செலுத்த வில்லை.அவர்கள் அத்தொகையை செலுத்தும் வரை இனி கடனில் புதிதாக டிக்கெட் வழங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.