இன்று முதற்கட்ட தேர்தல் -ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு

Default Image
  • ஊரக உள்ளாட்சிகளுக்கு இன்று  தேர்தல் நடைபெறுகிறது. 
  • வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும் தினத்தில் விடுமுறை அளித்து ஊதியத்தையும் பிடித்தம் செய்தால்  நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.விடுமுறை அளிப்பதன் மூலமாக, சம்பந்தப்பட்ட ஊழியா் குறிப்பிட்ட அந்த நாளுக்கான ஊதியத்தைத் வழங்காமல் இருக்க கூடாது.அவ்வாறு ஊதியம் அளிக்கப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட வேலை அளிக்கும் நிறுவனத்திற்கு ரூ.500 வரையில் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்