பெண் குழந்தைகள் பாதுகாப்பில் காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும்- ஸ்டாலின் ட்வீட்
- பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
- பெண் குழந்தைகள் பாதுகாப்பில் காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் (@CHILDLINE1098 ) தமிழ்நாடு, இந்தியாவில் 2-வது மாநிலமாகியுள்ளது.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில், ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினாலும்,காவல்துறையாவது தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன்! pic.twitter.com/i4DdxHEBNM
— M.K.Stalin (@mkstalin) December 26, 2019
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், அதிமுக ஆட்சியில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில், ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினாலும், காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.