சூரிய கிரகணத்தின் போது உணவு வழங்கிய தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.!
- நேற்று சூரிய கிரகணத்தின் போது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக “சாப்பிடலாம் .! வெளியே வரலாம் ! மூடநம்பிக்கையை ஒழித்திடுவோம் !” என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- சூரிய கிரகணத்தின் போது உணவு உண்ணக்கூடாது என்ற மூடநம்பிக்கையை போக்கும் வகையில் உணவு கொடுக்கப்பட்டது .
சூரியன், சந்திரன்மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருவதால் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்த சூரிய கிரகணம் காலை 8.06 மணிக்கு தொடங்கி 11.16 வரை சுமார் 3 மணிநேரம் நீடித்தது. இதனை பல பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
சூரிய கிரகணம் காரணமாக பல இடங்களில் கோவில்கள் நடைசாத்தப்பட்டு பின்னர் திறக்கப்பட்டது. மேலும் சூரிய கிரகணத்தை சாதாரண கண்களில் பார்க்கக் கூடாது என மருத்துவர்களும் , விஞ்ஞானிகளும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
இதை அடுத்து பொதுமக்கள் சூரிய கிரகணத்தை அதற்கென்று உருவாக்கப்பட்ட கண்ணாடி மற்றும் தொலைநோக்கி மூலமாக பொதுமக்கள் பார்த்தனர்.இந்நிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக “சாப்பிடலாம் .! வெளியே வரலாம் ! மூடநம்பிக்கையை ஒழித்திடுவோம் !” என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது.
சூரிய கிரகணத்தின் போது உணவு உண்ணக்கூடாது என்ற மூடநம்பிக்கையை போக்கும் வகையில் அறிவியலை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக சென்னையில் உள்ள பெசன்ட் நகர் கடற்கரையில் இந்த உணவு கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.