அதிர்ச்சி செய்தி ! காதலர் தினம் குறித்த செய்திக்கு தடை ….
பாகிஸ்தான் ஊடகங்களுக்கு காதலர் தினம் குறித்த செய்திகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம், பிப்ரவரி 14ம் தேதியை காதலர் தினமாகக் கொண்டாடக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து ஊடகங்களுக்கு பாகிஸ்தான் அரசு மின்னணு ஊடக கண்காணிப்பு நிறுவனம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. தனி நபர்களின் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என்ற போதும், அரசு நிறுவனங்கள் அதை கொண்டாடவும், ஊடகங்கள் படம் பிடித்து ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.