விக்ரம் வேதா ‘உண்மையிலேயே’ வெற்றிப்படமா? ஒரு நேரடி பார்வை ….

Default Image

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்துள்ள ‘விக்ரம் வேதா’ படத்தை உலகமகா வெற்றிப்படம் போல் சித்தரித்து வருகின்றனர்.

உண்மையில் விக்ரம் வேதா வெற்றிப்படமா?

சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற தியேட்டர் ஸ்டிரைக் காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதி குழப்பத்துக்குள்ளானது.
ஜூலை 7-ம் தேதி ரிலீசாகவிருந்த ‘விக்ரம் வேதா’ படத்தின் ரிலீஸ் தேதியும் குழப்பத்துக்குள்ளாகி ஒருவழியாக ஜூலை 21-ஆம் தேதி அன்று வெளியானது.
அதே தேதியில் மீசைய முறுக்கு படமும் வெளியானது.
ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்த பிறகு தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்ததால், சில வாரங்களுக்கு முன் வெளியான ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், பண்டிகை படங்கள் வசூல் ரீதியில் படு தோல்வியடைந்தன.
எனவே ஜூலை 21-ஆம் தேதி ‘விக்ரம் வேதா’, ‘மீசைய முறுக்கு’ படங்கள் வெளியானபோது இரண்டு படங்களும் ஜி.எஸ்.டி.யால் அடி வாங்கும் என்று திரையுலகப் பண்டிதர்கள் கணித்தனர்.
அதற்கு மாறாக, இரண்டு படங்களுக்கும் சென்னை போன்ற நகரங்களில் ஓரளவுக்கு ஓப்பனிங் இருந்தது.இதை வைத்து ‘மீசைய முறுக்கு’ படத்துக்கு சக்சஸ் மீட்டையே நடத்தி முடித்துவிட்டனர்.
‘விக்ரம் வேதா’, ‘மீசைய முறுக்கு’ படங்களுக்கு கிடைத்த ஓப்பனிங்கை வைத்து இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிசில் பட்டையைக் கிளப்பும் என்று எதிர்பார்த்தவேளையில், மூன்று நாட்களுக்குப் பிறகு நிலவரம் தலைகீழாகிவிட்டது.
சென்னை போன்ற நகரங்கள் தவிர்த்து பல ஊர்களில் கூட்டமில்லாமல் பல தியேட்டர்களிலிருந்து ‘விக்ரம் வேதா’ படத்தை தூக்கிவிட்டு நிபுணன் படத்தை திரையிட்டுவிட்டனர்.
ஆனாலும் அந்தப் படத்தை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட்ட விசியோகஸ்தருக்கு நஷ்டமில்லை, லாபம்தான்.
‘விக்ரம் வேதா’ படத்தை 9 கோடிக்கு வாங்கினார் அந்த விநியோகஸ்தர்.
தமிழகம் முழுக்க நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், சென்னை, செங்கல்பட்டு ஏரியாவில் மட்டுமே 12 கோடி வசூலித்திருக்கிறது.
உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, விக்ரம் வேதா வெற்றிப்படம் என்பதைப்போல் கூவிக்கொண்டிருக்கிறார்கள்.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்