உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கு விடுமுறை
- உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கு டிச.27 மற்றும் 30ம் தேதி பொது விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.
- கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்று அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆனது 27 மாவட்டங்களில் இருகட்டங்கங்களாக நடைபெறுகிறது.இந்நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கி வருகிறது.இந்நிலையில் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் 27 ந்தேதி மற்றும் 30ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியீட்டுள்ளது அதில் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு டிசம்பர் 27,3 0ஆம் தேதிகளில் விடுமுறை அறிவித்து உள்ளது.
மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பொது விடுமுறை கிடையாது என்று அறிவித்துள்ளது.