மோசமான கிறிஸ்துமஸ் பரிசை கொடுத்த தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகள்.!
- அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 வயது சிறுமிக்கு சர்ப்ரைஸ் என்ற வாழைப்பழத்தை கொடுத்துள்ளார்.
- ஆனால் சர்ப்ரைஸ் கொடுத்த தாய்க்கு மகள் சர்ப்ரைஸ் கொடுத்தது தான் சுவாரிஸ்யம்.
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 வயது சிறுமிக்கு சர்ப்ரைஸ் என்ற வகையில் அவரது தாய் பரிசு ஒன்று சிறுமிக்கு வழங்கினார். அம்மா ஏதோ பரிசு கொடுத்திருக்கிறாரே என்று ஆவலாகக் குழந்தை திறந்து பார்க்கிறது. பின்னர் பார்த்ததும் கியூட்டாக பனானா பனானா என உற்சாகத்தில் துள்ளி குதித்து அதை வேக வேகமாக பிரிக்கிறது. பின்னர் அவரது தாய் வாழைப்பழ தோலை உரித்து கொடுத்து, அந்த சிறுமி கால்களை ஆட்டிக் கொண்டே உற்சாகமாக வாழைப்பழத்தை ருசிக்கிறது.
I Tried Giving My Daughter The Worst Xmas Gift Ever & I Didn’t Expect This Reaction ???? pic.twitter.com/44cJytI83m
— LGND (@iamlgndfrvr) December 20, 2019
இந்நிலையில், என் மகளுக்கு மோசமான கிறித்துமஸ் பரிசை வழங்க முயற்சித்தேன், ஆனால் இது எதிராக எனக்கு மாறியுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் குழந்தைக்கு சர்பிரைஸ் செய்ய நினைத்த தாய், நான் தான் உண்மையிலேயே ஆச்சரியத்தில், மகிழ்ச்சியில் ஆழ்த்துள்ளேன். என் குழந்தை இந்த மாதிரியான மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாள் என நான் எதிர்பார்க்கவே இல்லை என இந்த நிகழ்வை அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி தற்போது ட்விட்டரில் 20.6 மில்லியன் முறை பார்க்கப்பட்டு , 1.5 மில்லியன் லைக்ஸுகளையும் குவித்து வருகிறது.