உள்ளாட்சித் தேர்தல் : டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

- தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
- உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு ,அவர்கள் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தனர். வாக்கு எண்ணிக்கை 2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,இன்று (டிசம்பர் 25 ஆம் தேதி )மாலை 5 மணி முதல் 27-ஆம் தேதி மாலை 5 மணி வரையும், 28-ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2ம் தேதி முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025