சீனர்களிடம் மன்னிப்புக் கேட்டது மெர்சிடிஸ்!
தலாய்லாமா படத்தைச் சமூக வலைத்தளத்தில் பயன்படுத்தியதற்காக மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம் சீனாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராமில், தலாய் லாமாவின் வாழ்க்கையில் இருந்து உந்துதலைப் பெற்று உங்கள் வாரத்தைத் தொடங்குங்கள் எனக் குறிப்பிட்டிருந்தது.
இப்படிக் குறிப்பிட்டதால் சீனாவில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களின் கண்டனத்துக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஆளானது. இதையடுத்து அந்த இன்ஸ்டாகிராம் பதிவை மெர்சிடிஸ் பென்ஸ் அகற்றியது மட்டுமல்லாமல் சீனாவில் புகழ்பெற்ற வெய்போ என்கிற சமூக வலைத்தளத்தில் மன்னிப்புக் கடிதத்தையும் வெளியிட்டுள்ளது.
அதற்குப் பிறகும் அமைதியடையாத சீனர்கள் சிலர், வெய்போ தவிர மற்ற சமூக வலைத்தளங்களில் இந்த மன்னிப்புக் கடிதத்தை வெளியிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.