தமிழகத்தில் கூகுள் மையம்?கூகுள் பலூன் ?
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தமிழகத்தில் கூகுள் மையம் அமைக்க அந்த நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கூகுள் நிறுவனத்தின் இந்திய தலைமை இயக்குநர் சேத்தன் கிருஷ்ணசாமி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், டெல்லி, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களைப் போன்று தமிழகத்திலும் கூகுள் மையம் அமைக்க கோரியிருப்பதாகத் தெரிவித்தார்.
இயற்கைப் பேரிடர் காலங்களில் சென்னையில் இணையதளத் தொடர்பு பாதிக்காமல் தடுக்க கூகுள் பலூன் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வகை பலூன் தொழில்நுட்ப வசதி மூலம் 20 கிலோமீட்டர் சுற்றுவட்டாரப்பகுதியில் இணையதளத் தொடர்பு வழங்கமுடியும் என்று அவர் தெரிவித்தார்.
மதுரை, தருமபுரி, சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் கிராமப்புற பெண்களுக்கு கணினி பயிற்சி அளிக்கவும் அவர்களுக்கு அவர்களுக்கான இணையதள சேவையை அதிகரிக்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.