தினம் ஒரு திருவெம்பாவை

Default Image
  •  எவ்வாறு இறைவனை உள்ளன் அன்போடு வழிபட வேண்டும் என்று மாணிக்கவாசகரிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுவர்
  • மார்கழி திருமால் மட்டுமல்லாமல் திருநீலகண்டனை கண்டு வணங்க வேண்டிய மாதமாகும்.அவ்வாறு வணங்கும் போது மாணிக்கவாசர் அருளிய திருவெம்பாவை பதிகத்தை பாடி வழிபட்டால் மிகுந்த பலன்  

திருவெம்பாவை

பாடல் : 8

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்

ஏழில் இயம்ப இயம்பும்வென் சங்கெங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

வாழியீ தென்ன உறக்கமோ? வாய்திறவாய்

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழைபங் காளனையே  பாடேலோர் எம்பாவாய்!

– மாணிக்கவாசகர்-

பாடல் விளக்கம் :

கோழி கூவ, எங்கும் சிறு பறவைகள் ஒலிக்கின்றன; நாதசுரம் ஒலிக்க, எங்கும் வெண்சங்குகள் ஒலிக்கின்றன. நாங்கள் தனக்குவமையில்லாப் பேரொளியை,ஒப்பற்ற  பேரருளை மேலொன்றில்லாத மெய்ப்பொருளைப்  பாடினோம்; உனக்குக் கேட்கவில்லையா! வாழ்வாயாக! உன் உறக்கம் தான் எப்படிப்பட்டதோ வாய் திறந்து ஒரு வார்த்தை சொல். அருட்பெருஞ் கடலாகிய  எம்பெருமானுக்கு அன்பு செய்யும் முறை இப்படித்தானோ? ஊழிக்காலத்தில் தனி முதல்வனாய்த் திகழும் ஒப்பற்ற தலைவனை, உமையோரு பாகனையே பாடுவாயாக.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்