#TamilCinema2019 : தேசிய விருதுபட்டியலில் ஓரங்கட்டப்பட்ட தமிழ் சினிமா!

- தமிழ் சினிமாவில் இந்தாண்டு வழங்கப்பட்ட தேசிய விருது சிறந்த தமிழ் மொழி திரைப்படம் என்கிற பிரிவில் பாரம் எனும் படத்திற்கு கிடைத்தது.
- 2018இல் மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், வட சென்னை, 96, ராட்சசன், கானா என பல படங்கள் வெளியாகி இருந்தன.
2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கு இந்த வருடம் இந்திய அரசு வழக்கம் போல தேசிய விருதினை அறிவித்தது.ஆனால் அந்த லிஸ்டில் பெரும்பாலும் தென்னிந்திய திரைப்படங்கள் இடம் பெற வில்லை. அதிலும், தமிழ் சினிமாவிற்கு சிறந்த தமிழ் மொழி திரைப்படமாக ( கட்டாயம் தமிழ் படத்திற்குத்தான் கொடுக்க வேண்டும் ) பாரம் எனும் படத்திற்கு கொடுக்கப்பட்டது.
அந்த ஒரு விருதை தவிர தமிழ் சினிமா திரைப்படங்கள் வேறு vவிருதினை பெற வில்லை. இந்த விருது பட்டியல் வெளியானது முதல் தமிழ் சினிமா இயக்குனர்கள், விமர்சகர்கள் , பிரபலங்கள் என பலர் இதற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்தனர். ஒரு சிலர் இன்னும் 4 ஆண்டுகளுக்கு நமக்கு தேசிய விருது கிடைக்காது என வெளிப்படையாகவே தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு வெளியாகி இருந்த விஜய் சேதுபதி தயாரித்த மேற்கு தொடர்ச்சி மலை ( பல சர்வதேச விழாக்களில் விருது பெற்றது. ), இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கியிருந்த திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதீய கொடுமைகள் பற்றி படம் தெளிவாக பேசியது. தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வடசென்னை திரைப்படம் வடசென்னை மக்களின் வாழ்வியலை கற்பனை கலந்து உயிரோட்டமாக ரத்தமும் சதையுமாக பதிவு செய்த திரைப்படம்.
விஜய் – சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியாகி இருந்த 96 அழகான உணர்வுபூர்வமான காதல் படம். பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி சிவகார்திகேயன் தயாரித்திருந்த கனா. ராம்குமார் இயக்கத்தில் திரில்லர் கதையம்சத்தை மையமாக கொண்ட திரைப்படம் ராட்சசன் என பல படங்கள் வெளியாகி விமர்சகர்களையும் ரசிகர்களையும் மிகவும் கவர்ந்திருந்தன.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025