டிடியின் அழகு அதிகரித்து கொண்டே செல்கிறது என கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள் .!
- கண்ணை கவரும் பச்சை நிறத்தில் அழகிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
- புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் டிடி யின் அழகு அதிகரித்து கொண்டே செல்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி.இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி உள்ளார்.அதில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் , காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானது.
இதனால் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் திவ்யதர்ஷினி தனது நண்பரான ஸ்ரீகாந்தை கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் இருவரும் இடையில் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக விவாகத்து பெற்று விட்டனர்.
சில நாள்களுக்கு முன் திவ்யதர்ஷினி ஒரு விருது விழாவில் தனது விவாகரத்தை பற்றி பேசினார். அதில் ” எனது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்கள் உங்களுக்குத் தெரியும். நம் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன் கல்யாணமான உறவு கூட முறியலாம், வேறு எந்த உறவுகள் வேண்டுமானாலும் தள்ளி போகலாம் ” என கூறினார்.
இந்நிலையில் கண்ணை கவரும் பச்சை நிறத்தில் அழகிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் டிடி யின் அழகு அதிகரித்து கொண்டே செல்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.