புதிய யுக்தியில் களம் இறங்கும் சீனா!பொருட்களை விநியோகிக்க புதிய திட்டம் …
சீனாவில் விமான போக்குவரத்துத்துறை, பொருட்களை ஆளில்லா விமானம் மூலம் பொருட்களை விநியோகிக்க அனுமதி அளித்துள்ளது.
ஜேடி டாட் காம் என்ற ஆன்லைன் விற்பனை மையம் ட்ரோன்கள் மூலம் பொருட்களை வீடுகளுக்கு நேரடியாக விநியோகிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து சீனா உள்நாட்டு விமானப் போக்குவரத்து அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து ஸியான் நகரத்தில் இதற்கான சோதனை முயற்சி நடைபெற்றது. வீட்டு உபயோகப் பொருட்கள் அடங்கிய பெட்டி ஒன்று சரியான முகவரியில் ட்ரோன் விமானம் மூலம் விநியோகிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.