உள்ளாட்சித் தேர்தல் : தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்

Default Image
  • ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 
  • தமிழகத்தில் பள்ளிகள்  ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு ,அவர்கள் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தனர். வாக்கு எண்ணிக்கை 2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

 

இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அவரது அறிக்கையில்,  தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் .உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை  ஜனவரி 2ஆம் தேதி நடப்பதால் ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்