உள்ளாட்சித் தேர்தல் – நீட் பயிற்சி வகுப்புகள் ஒத்திவைப்பு
- ஊரக உள்ளாட்சிகளுக்கு தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.
- இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இதன் காரணமாக ஏற்கனவே கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. அதன்படி,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது. உள்ளாட்சி தேர்தல் பணியை முன்னிட்டு இன்று முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை இந்தாண்டு மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.