பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி சாலை விபத்தில் காயம்!
பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தார். அதே காரில் பயணம் செய்த மற்றொருவர் உயிரிழந்தார். பிரதமர் நரேந்திர மோடியும் அவர் மனைவி ஜசோதாபென்னும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜசோதாபென்னும் அவர் உறவினர்களும் ஒரு காரில் பரண் என்னுமிடத்தில் இருந்து உஞ்சா என்னுமிடத்துக்குச் சென்றுள்ளனர். ராஜஸ்தானில் கோட்டா – சித்தூர் நெடுஞ்சாலையில் கார் சென்றபோது லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜசோதாபென் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார்.
அவர் உறவினரான வசந்த் பாய் உயிரிழந்தார். ஓட்டுநரான ஜெயேந்திரா என்பவர் படுகாயமடைந்தார். காயமடைந்தவர்கள் சித்தோர்கரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.