#BREAKING: திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி நிறைவு
- குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது.
- திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்திய பேரணி நிறைவடைந்தது.
இன்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது .இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர் திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
தற்போது சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது .ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் கூட்டாக பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார்கள்.