பேரணியில் கருப்பு உடையில் கலந்து கொண்ட இளைஞரணி.!
- குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது.
- அதில் இளைஞரணி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் பேரணியாக சென்னையில் உள்ள எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் ப.சிதம்பரம், வைகோ, திருமாவளவன், தயாநிதி மாறன், கனிமொழி, மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். மேலும் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.