பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதில் தமிழகம் எத்தனாவது இடம் ?
- குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் 88 கோடி ரூபாய் அளவுக்கு ரயில்வே துறைக்கு சேதம்.
- 790 வழக்குகள் கொண்டு தமிழகம் 3வது இடத்தில் உள்ளது
எல்லா போராட்டங்கள் நடைபெறும் போதெல்லாம் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. இதை தடுப்பதற்காக 1984-ம் ஆண்டு பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் 88 கோடி ரூபாய் அளவுக்கு ரயில்வே துறைக்கு உடைய சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் ஆயிரத்து 790 வழக்குகளுடன் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதிலும் தென்கிழக்கு மண்டலத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும்,வடகிழக்கு மாநிலங்களில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும், கிழக்கு மண்டலத்தில் 72 கோடி ரூபாய் அளவிலான ரயில்வே சொத்துகளும், சேதப்படுத்தப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது .