திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்நாளில் மூடல்
- திருப்பதி ஏழுமலையான் கோவில் சூரிய கிரணம் அன்று மூடப்படுகிறது.
- டிச.,26ல் நடைபெறும் சூரியகிரணம் ஆனது மிகவும் அபூர்வமான சூரியகிரணம் என்று தகவல்
சூரிய கிரகணம் வருகின்ற டிச.,26 தேதி இந்தியாவிலும்,தமிழகத்தில் 10 மாவங்களில் தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சூரிய கிரகணம் நடைபெற இருப்பதால் திருப்பதி எழுமலையான் கோவில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி 25ம் தேதி இரவு 11 மணி முதல் 26ம் தேதி நண்பகல் 12 மணி வரை ஏழுமலையான் கோவில் மூடப்பட உள்ளது.கிரணகம் அன்று கோவில் நடை சாற்றப்பட்டு கிரணகம் முடிந்த பின்னர் மீண்டும் கோவில் நடை பரிகார பூஜைக்கு பின் திறக்கப்படும் பிற்பகல் 2 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.