மெரினாவில் பொதுமக்களுக்கு தடை..!
- சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பு
- விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் குவிந்த மக்களுக்கு ஏமாற்றம்..
சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நாடு முழுவதும் போராட்டம் வலுபெற்று வருகின்றது.
மேலும் போராட்டம் கலவரமாகவும்,வன்முறையாகவும் மாறி பொதுச்சொத்துக்கள் சூரையாடப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவரிடமிருந்து சேதத்திற்கான தொகையை வசூலிக்க அவர்களின் சொத்துக்களை மூடக்கி உள்ளது உத்திரபிரேச அரசு.
இவ்வாறு குடியுரிமை நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரியும் நிலையில் சமூக வலைதளங்களில் சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் குடியுரிமைக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று தகவல் பரவியதால், போலீசார் கடற்கரைக்கு பொதுமக்கள் வருகையை தடுக்கும் விதமாக அனுமதி மறுத்துள்ளனர்.இதனால் விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் கடற்கரைக்கு வருகை தரும் மக்கள் ஏமாற்றத்தோடு திருப்பி சென்றனர்.