அதிரடியாக தனது கட்டணத்தை குறைத்தது வோடபோன் நிறுவனம்.. வாடிக்கையாளர்களை புருவம் உயர்த்த செய்யும் தகவல்..
- இந்தியாவில் தகவல் தொடர்பு நிறுவனங்கள் தற்போது அலைபேசி மற்றும் இணைய சேவைகளின் கட்டணத்தை திடீரென்று அதிகரித்தது.
- இந்நிலையில் வோடபோன் நிறுவனம் அதன் கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது.
இதனால் பல்வேறு நிறுவனங்களின் கட்டணமும் அதிவேகமாக அதிகரித்தது. இதில் வோடபோன் நிறுவனம் தற்போது, ரூ.24, ரூ.129, ரூ.199, ரூ.269 என்ற விலையில் 4 புதிய ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல் திட்டமாக ரூ.24 திட்டம்:
இதில், 100 நிமிடங்கள் இலவச கால் (அதிலும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இதை உபயோகிக்க முடியும்) மற்ற நேரங்களில் போன் கால் செய்தால் நொடிக்கு 2.5 பைசா என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படும். இதன் ஆயுட்காலம் 14 நாட்கள் ஆகும்.
இரண்டாவது திட்டமாக.129 திட்டம்:
இதில், அன்லிமிடெட் கால், 2ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை கொண்டது. இது 14 நாட்கள் ஆயுட்காலம் கொண்டது.
மூன்றாவது திட்டமாகரூ.199 திட்டம்:
இதில், அன்லிமிடெட் கால், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் கொண்டது. இது 21 நாட்கள் ஆயுட்காலம் கொண்டது.
நான்காவது திட்டமாக ரூ.269 திட்டம்:
இதில், அன்லிமிடெட் கால், 4 ஜிபி டேட்டா, 600 எஸ்.எம்.எஸ், கொண்டது. இது 56 நாட்கள் ஆயுட்காலம் கொண்டது.