INDvsWI:தொடரை வெல்லப்போவது யார் ? இந்திய அணி பந்துவீச்சு
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது .முதல் ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் ,இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றது.இந்நிலையில் இன்று 3 வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலத்தில் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்து உள்ளார்.
இந்திய அணி வீரர்கள்:
ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன் ), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர் ), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சைனி , முகமது ஷமி, ஷார்துல் தாகூர், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றனர்.இந்த ஒருநாள் போட்டியில் சைனி அறிமுகமாகியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:
ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், சிம்ரான் ஹெட்மியர், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், கீரோன் பொல்லார்ட் (கேப்டன் ), ஜேசன் ஹோல்டர், கீமோ பால், அல்சாரி ஜோசப், ஷெல்டன் கோட்ரெல், கேரி பியர் ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்த போட்டியில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.