இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை.. உள்துறை அமைச்சகம் உறுதி என தகவல்..
- தமிழக முதல்வர் டெல்லி பயண விவகாரம்.
- இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை என உறுதி.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடந்த 19ம் தேதி டெல்லி சென்று அங்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற அந்த சந்திப்பில், குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பேசினார், அதுமட்டுமில்லாமல், ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்றும், எனவே தற்போதைய தமிழக அரசின் நிலைப்பாடும் அது தான் என்ற கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் முன்வைத்தார்.இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விரைவில் பரிசீலிக்கும் என்றும், சரியான தருணத்தில் இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என தமிழக முதலமைச்சரிடம் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நிறைவேறினால் பல்லாயிரக்கணக்கான இலங்கை அகதிகளுக்கு மறுவாழ்வு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.