சம்பளத்தை உயர்த்த போராடும் களத்தில் தனக்கு அதிக பரிசுத்தொகையா? ராகுல் டிராவிட் கடும் அதிருப்தி….

சமீபத்தில் நிறைவடைந்த யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா அணி  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வீழ்த்தி சாம்பியன் ஆனது. மேலும், 4 முறை சாம்பியன் ஆன ஒரே அணி என்ற பெருமையும் பெற்றது.

Image result for rahul dravid

யு-19 உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ள இந்திய அணிக்கு, பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இதில், அணி வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சமும்,பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரூ.50 லட்சமும் ரொக்கப் பரிசு பெறுகின்றனர். பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, ஃபீல்டிங் பயிற்சியாளர் அபய் சர்மா உள்ளிட்ட அணியின் உதவிப் பணியாளர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Image result for rahul dravid

இந்த அறிவிப்பில் பயிற்சியாளர் டிராவிட் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பயிற்சியாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிசுத்தொகையை அளித்திருக்க வேண்டும், எனக்கு மட்டும் அதிகமாகப் பரிசுத்தொகை வழங்குவது ஏன்? இதர பயிற்சியாளர்களும் அணியின் வெற்றிக்காகப் பாடுபட்டுள்ளார்கள். எனவே பயிற்சியாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாகப் பரிசுத்தொகை வழங்கவேண்டும் என பிசிசிஐயிடம் ராகுல் டிராவிட் தனது அதிருப்தியையும் கோரிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளதாகப் பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

2011 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது பிசிசிஐயின் பரிசுத்தொகையாக தோனி, சச்சின் உள்ளிட அணி வீரர்களுக்குத் தலா ரூ. 2 கோடியும் (முதலில் ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்டது) கேரி கிறிஸ்டன் உள்ளிட்ட பயிற்சியாளர்களுக்குத் தலா ரூ. 50 லட்சமும் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்குத் தலா ரூ. 25 லட்சமும் வழங்கப்பட்டன. 2012-ல் யு-19 உலகக் கோப்பையை உன்முக்த் சந்த் தலைமையிலான இந்திய அணி வென்றபோது அணி வீரர்களுக்குத் தலா ரூ. 20 லட்சமும் பயிற்சியாளர் உள்ளிட்ட உதவிப் பணியாளர்களுக்குத் தலா ரூ. 15 லட்சமும் வழங்கப்பட்டன.

எனவே இந்தமுறையும் தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட அனைத்து பயிற்சியாளர்களுக்கும் ஒரேமாதிரியான பரிசுத்தொகையை வழங்கியிருக்க வேண்டும் என்பது டிராவிட் விருப்பமாக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment