தொடரும் இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி!

Default Image

இந்திய பங்குச் சந்தைகளும் அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக  வீழ்ச்சியடைந்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் அதிகபட்சமாக 1,274 புள்ளிகள் வரை சரிந்து 33,482 ஆக குறைந்தது. எனினும், நண்பகல் நிலவரப்படி, சென்செக்ஸ் 33,886 புள்ளிகள் வரை உயர்ந்தது.

இதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி, அதிகபட்சமாக 310 புள்ளிகள் வரை சரிந்து 10,276 என்ற அளவிற்கு இறங்கியது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்தை விட சிறப்பாக உள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியானதால், அமெரிக்க டாலருக்கான வட்டியை அந்நாட்டின் ஃபெடரல் ரிசர்வ் விரைவில் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் தங்களின் வசமிருந்த பங்குகளை விற்று அதில் கிடைக்கும் தொகையை கையிருப்பாக வைத்திருக்கும் முடிவை எடுத்ததால், பங்குச் சந்தையில் இறக்கம் காணப்படுகிறது.

இந்திய சந்தைகளைப் பொறுத்தவரை பொது பட்ஜெட் அறிவிப்புகளால் கடந்த வெள்ளிக்கிழமை 839 புள்ளிகளும், நேற்றைய தினம் 309 புள்ளிகளும் சரிந்திருந்தது. அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு, இந்திய சந்தைகளிலும் இன்று கடும் சரிவை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்னும், ஒரு வாரத்திற்கு பங்கு வர்த்தகத்தில் திடீர் சரிவுகள் இருக்க வாய்ப்பிருக்கலாம் என முதலீட்டு ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்