தெலுங்கானா என்கவுண்டர் : 4 பேர் உடலுக்கும் மறு பிரேத பரிசோதனை -நீதிமன்றம் உத்தரவு
- தெலுங்கானா பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- தெலுங்கானாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி பெங்களூரு ஹைதிராபாத் நெடுஞ்சாலையில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்டார்.இச்சமபவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவலு ஆகிய நான்குபேரையும் கைது செய்து கடந்த 6ஆம் தேதி போலீஸ் விசாரணையின் போது என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.இதனை தொடர்ந்து தெலுங்கானா அரசும் விசாரணை நடத்த சிறப்பு குழு அமைத்துள்ளது.இந்த சம்பவத்தை பலரும் பாராட்டினாலும், மனித உரிமை ஆணையம் இதனை எதிர்த்தது விசாரணை நடத்தியது.
இதன் பின்பு 4 பேரின் உடல்களும் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.இது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் , 4 பேரின் உடல்களையும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெலுங்கானா உய்ரநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த நீதிமன்றம் ,தனியார் மருத்துவர் குழு ஒன்றை டெல்லியிலிருந்து வரவழைத்து, 4 பேர் உடலுக்கும் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.