திமுக பேரணியில் கமலின் கட்சி பங்கேற்குமா? பங்கேற்காதா ?
- குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் 23-ம் தேதி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சென்னையில் பேரணி நடைபெறுகிறது.
- திமுக சார்பாக நாளை மறுநாள் பேரணி நடைபெற உள்ள நிலையில், சென்னையில் திடீர் சந்தித்துள்ளனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த சட்டம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ,குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டிசம்பர் 23ஆம் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்குக் கமலுக்கும் அழைப்பு விடப்படும் என்றும் திமுகவின் கூட்டம் குறித்து கமல்ஹாசன் என்னிடம் பேசினார் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.பின்னர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக நடத்தும் பேரணியில் தன் கட்சி பங்கேற்கும் என்று மக்கள் நீதி மமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.எனவே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்குமாறு நேரில் சென்று மக்கள் நீதி மய்யம் தலைவர்கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தார் திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி.
இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக திமுக நடத்தும் பேரணியில் கமல் கட்சி பங்கேற்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது.ஏனென்றால் இன்று திமுக தலைவர் ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் அருணாச்சலம், செளரிராஜன் சந்தித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், தங்கள் முடிவு குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.இதனால் திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்குமா, பங்கேற்காதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.