எனக்கு முதலமைச்சர் பதவி வேண்டவே வேண்டாம் : டிடிவி அதிரடி
மக்கள் சந்திப்பு பயணத்தை டி.டி.வி.தினகரன் இந்த மாதம் 2-ந் தேதி முதலே தஞ்சைஇலிருந்து மக்களை சந்தித்து வருகிறார். நேற்று திருவையாறு பகுதியில் பிரசாரம் செய்தார். இதனையடுத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேறக்கோரி போராட்டம் நடந்து வரும் கதிராமங்கலம் கிராமத்துக்கு மக்களை சந்திக்க தினகரன் சென்றார்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், பாட்டிலில் தினமும் குடிநீர் கலங்கலான நீரை தினகரனிடம் காண்பித்து குறைகளை தெரிவித்தனர். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.
அதன்பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
‘டெல்டா மாவட்டங்களில் வைரமே கிடைத்தாலும் அப்பகுதியில் விவசாயம் மட்டுமே நடைபெற வேண்டும் எனவும், கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டும் என்றும் தேவைப்பட்டால் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும், எனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசையில்லை. நான் கூறும் 6 அமைச்சர்களை நீக்கிவிட்டு எங்களுடன் இணைந்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன்.’ இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.