புதிய முயற்சியில் காவல்துறை!இனி வாரம் ஒருமுறை கச்சேரி …..
காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் , சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வார இறுதி நாட்களில் மக்கள் கூடும் இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையேயான நல்லுறவை வளக்கும் விதமாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையின் இசைக்குழுவைப் பயன்படுத்தி நிகழ்ச்சிகளை நடத்துமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
10 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், சென்னை காவல் ஆணையருக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாரமே இசை நிகழ்ச்சிகளை தொடங்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை அணிவகுப்பு, பிரிவு உபசார விழா ஆகியவற்றுக்கு மட்டுமே காவல்துறையின் இசைக்குழு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இசை நிகழ்ச்சிகளுக்காக இந்தக் குழு பயன்படுத்தப்படவுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.