என்றும் பதினாறாக இளமையுடன் இருக்க இதனையெல்லாம் செய்ய வேண்டுமாம்.!
- ஐம்பது வயது தாண்டிய பிறகும் கூட என்றும் பதினாறு வயதில் இருக்க வேண்டுமென்ற ஆசை நம் எல்லோருக்கும் இருக்கிறது.
- அதனால் வயசானாலும் உங்க அழகும் இளமையும் உங்களைவிட்டுப் போகாமலிருக்க கீழே வரும் டிப்ஸை ட்ரைபண்ணி பாருங்க.
ஐம்பது வயது தாண்டிய பிறகும் கூட என்றும் பதினாறு வயது இளமையயாக இருக்க வேண்டுமென்ற ஆசை நம் எல்லோருக்கும் இருக்கிறது. இதனால் வயதாகும்போது ஏற்படும் மிக முக்கியமான தோல் சருமத்தளர்ச்சிதான். அதை இயற்கையாகத் தடுக்கவும், சருமத்தை இறுக்கமாக்கவும் எளிமையான பேஸ் பேக்கைப் பரிந்துரைக்கிறார், அழகுக்கலை நிபுணர்.
இதில் தேவையான பொருள்கள்: 1. பாதாம் – 3 நன்கு ஊறவைத்து அரைத்திருக்க வேண்டும், 2.பாலில் ஊறவைத்த 4 டீஸ்பூன் ஓட்ஸ், 3. பாலில் ஊறவைத்த சிறிய அளவு குங்குமப்பூ, 4. கடலைமாவு – 2 டீஸ்பூன் இவையெல்லாம் அவசியம் இந்த ஃபேஸ் பேக்கு தேவைபடும் பொருட்கள்.
பேஸ் பேக் தயாரிக்கும் முறை : முதலில் பாதாம் விழுதில், பாலில் ஊறவைத்த ஓட்ஸ் மற்றும் குங்குமப்பூவை கலந்துகொள்ளவும். இதனுடன் கடலைமாவு சேர்த்து குழைத்துக்கொள்ளவும். சில நிமிடங்கள் ஊறவைத்தால், பேஸ் பேக் தயாராகிவிடும்.
அப்ளை செய்யும் முறை : பேஸ் பேக்கை அப்ளை செய்வதற்கு முன், பால் வைத்து முகத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் காய்ச்சாத பால்தான் பயன்படுத்த வேண்டும். பின்பு முகத்தில் பால் தடவிவிட்டு, பஞ்சினால் துடைத்து எடுக்கவும். பாலிலுள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை மிருதுவாகவும் பளிச்சென்றும் ஆக்கும். இதனால் பழைய மேக்கப்பின் மிச்சம் இருந்தாலும் நீங்கிவிடும். மேலும் சருமத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும். எனவே, வாய்ப்பிருப்பவர்கள், தினமும் கூட பால் உபயோகித்து முகத்தை சுத்தம் செய்யலாம்.
இந்நிலையில் பேஸ் காஸ் (Gauze) எனப்படும், மெல்லிய துணியை முகத்தின் மேல் பொருத்திவிட்டு, தயாராக உள்ள ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்துப்பகுதிகளில் முழுக்க அப்ளை செய்யவும். பின்னர் சில நிமிடங்கள் கழித்து பேஸ் காஸை நீக்கினால் போதும். முகம் தோல் சுருக்கமில்லாமல், பளிச்சென மாறியிருக்கும். இதனை ஒரு வாரத்தில், அதிகபட்சமாக இரண்டு நாட்கள் இந்த பேஸ் பேக்கை முயற்சி செய்யலாம்.